வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (21:41 IST)

இயேசு நாதர் பிறப்பால் இந்து: கிறிஸ்துவ மதத்தினருக்குடையே பெரும் சர்ச்சை

இயேசு நாதர் பிறப்பால் ஒரு இந்து என்றும், தனது வாழ்நாளின் இறுதிக்காலங்களை இமய மலையில் கழித்தார் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கணேஷ் தாமோதர் சாவர்கரால் எழுதப்பட்ட புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார். இது கிறிஸ்துவ மதத்தினருக்குடையே பெரும் சர்ச்சையை கிளப்புயுள்ளது.
 
கணேஷ் தாமோதர் சாவர்கரின் புத்தகத்தை, சுமார் 70 ஆண்டுகளுக்குப் முன்பு மும்பையைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மறுபதிப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது
 
அந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பால் ஒரு இந்து என்றும், விஸ்வகர்மா பிராமணர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் என்பது, இந்து சமயத்தின் ஒரு பிரிவு தான் என்றும் அந்த குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இயேசுவின் இயற்பெயர் கேசவ் கிருஷ்ணா  எனவும், அவரது தாய்மொழி தமிழ் என்றும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, சில துறவிகள் மூலிகை மருந்துகளை கொடுத்து காப்பாற்றியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பின்னர் இமயமலையில் மடத்தை நிறுவி, சிவபெருமானை பூஜித்து, இயேசு முக்தி பெற்றதாகவும் தனது வாழ்நாளின் இறுதிக்காலங்களில் இயேசு நாதர், இமய மலையில் வசித்ததாகவும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

1946ஆம் ஆண்டு மராத்தி மொழியால் எழுதப்பட்ட இந்த புத்தகம் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.