1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. JEE Main April Session Answer Key 2026 Likely to be Released Tomorrow at jeemain.nta.nic.in

JEE மெயின் தேர்வு Answer Key வெளியாவது எப்போது? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்? முழு விவரங்கள்..!

JEE  exam
JEE மெயின் ஏப்ரல் அமர்வு தேர்விற்கான தற்காலிக விடை குறிப்புகள் நாளை, ஏப்ரல் 11-ஆம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த தேர்வெழுதிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in மூலம் விடைக் குறிப்புகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
JEE மெயின் ஏப்ரல் அமர்வு தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் 2 முதல் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்றன. தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப்பயன்படுத்தி இணையதளத்தில் லாக்-இன் செய்து விடை குறிப்புகளை சரிபார்க்கலாம். 
 
விடை குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதற்கான உரிய கட்டணத்தை செலுத்தி, ஆதாரங்களுடன் இணையதளம் வழியாகவே மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
மாணவர்களின் ஆட்சேபனைகளை தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்த பிறகு, இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். JEE மெயின் இறுதி முடிவுகள் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முடிவுகளுடன் சேர்த்து மாணவர்களின் தரவரிசை பட்டியலும் வெளியிடப்படும். உயர் கல்வி நிறுவனங்களில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த விடை குறிப்புகள் ஒரு முக்கியமான வழிகாட்டியாக அமையும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
விஜயின் பிரச்சாரம் ரத்து!.. இப்டியே போனா பாதி தொகுதி கூட போக முடியாது!...