வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (17:18 IST)

பவானி சிங்கை நீக்க கோரும் மனு: 3 நீதிபதிகளை அமைத்தது உச்ச நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு அளித்தனர்.
 
இந்த முரண்பட்ட தீர்ப்பால், இம்மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
 
இதனையடுத்து அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த மனு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
3 பேர் கொண்ட அமர்வில் இடம்பெற்றுள்ள ஆர்.கே.அகர்வால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.