வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (14:29 IST)

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்க கோரிய மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்  பவானிசிங்கை நீக்க கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த  மனுவில் நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால்  மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பவானிசிங்கை நீக்க கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்  பவானி சிங்கின் நியமனம் செல்லாது எனவும், ஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் எனவும் நீதிபதி மதன் பி.லோகூர் கூறினார். மேலும் புதிய வழக்கறிஞரை  நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
நீதிபதிகள் மதன் பி. லோகு,  பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், இரு நீதிபதிகளின் மாறுப்பட்ட கருத்தால் வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.