1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2015 (12:26 IST)

சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை நேரு உளவு பார்த்தாரா?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் உறவினர்களை 20 ஆண்டுகளாக உளவு பார்க்கப்பட்ட உளவுத்துறை பதிவுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பிறகு, கொல்கத்தாவின் உட்பர்ன் பார்க்கில் உள்ள எல்கின் சாலையில் சுபாஷ் சந்திர போஸின் 2 உறவுக்கார குடும்பங்கள் வசித்து வந்தது. அந்த இரண்டு குடும்பங்களையும், 1948ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
 

 
இது உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்தினருக்கு வரும் கடிதங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவை நகல் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது.
 
சுபாஷ் சந்திரபோஸின் உறவினர்கள் கையால் எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் பாதுகாப்பு படை மற்றும் ஐ.பி. உளவுப்பிரிவு தலைமையகத்திற்கு போன் மூலம் தெரிவிக்கப்பட்டு வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ கூறுகையில், “இது தவறான வரலாற்று விளக்கமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார். ஆம் ஆத்மி தலைவர் அசுதோஸ், “இது வலி மிகுந்ததாகவும், அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது என்றூ தெரிவித்துள்ளார்.
 
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “நீங்கள் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை பார்த்தீர்களேயானால், எங்கேயும் அதனுடைய இருட்டடிப்பை காண முடியும். அவர்களால் மறைக்கப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன.
 
தற்போதுதான் அத்தகைய எண்ணற்ற விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அவற்றில் நிறைய உண்மைகள் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 20 ஆண்டுகளில் சுமார் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு என்பது குறிப்பிடத்தக்கது.