1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified திங்கள், 20 மார்ச் 2023 (13:38 IST)

பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு: முக்கிய ஆலோசனை..!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் சந்தித்துள்ளதாகவும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருகை தந்துள்ளார் என்பதும் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கி அவரை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜப்பான் பிரதமர் அதன்பின் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் 
 
இரு தலைவர்களின் இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும் இந்தோ பாசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உயர்மட்ட குழுவினரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran