1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:51 IST)

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அம்மாநில போராட்டகாரர்களுக்கும், ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
 

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்.
 
இது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர். அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
அதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை  யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
இந்த நிலையில், அங்கு போராட்டகாரர்களை அடக்க நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.