செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2015 (19:06 IST)

ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிக்க கூடாது: மோடிக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு எந்த வித முயற்சியையும் மேற்கொள்ள கூடாது என்று பிரதமருக்கும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கும் விலங்குகள் நலவாரியம் அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

 
இதுகுறித்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு விலங்குகள் நல வாரியம் அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகளின் நலன் கருதி ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ள கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பில், எந்த திருத்தங்களும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டாம் என்றும், ஊடகங்களில் ஜல்லிகட்டு நடத்துவது தொடர்பான சாதகமான பதில்களை மத்திய அரசு கூறி வருவது வருத்தம் அளிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.