ஜல்லிக்கட்டு போட்டி காட்டு மிராண்டித்தனம்: காங்கிரஸ் தலைவரின் கருத்தால் சர்ச்சை


Ashok| Last Modified சனி, 9 ஜனவரி 2016 (19:36 IST)
ஜல்லிக்கட்டு போட்டி ஒரு காட்டு மிராண்டித்தனமான நிகழ்ச்சி என்றும் தென் மாநில அரசியல் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

 

 ஜல்லிக்கட்டு போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், தேர்தலில் பொதுமக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தென் மாநில அரசியல் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே, ஜல்லிக்கட்டு போன்ற காட்டு மிராண்டித்தனமான போட்டிகளுக்கு பாஜக அரசு அனுமதி அளித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். 
 
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் இந்த உத்தரவின் மூலம் பிரதமர் மோடி நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :