ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:11 IST)

இந்தியாவில் இன்று iPhone17 விற்பனை! முண்டியடித்த கூட்டத்தில் உண்டான கைக்கலப்பு! - அதிர்ச்சி வீடியோ!

iphone 17 fight

இன்று ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 17 இந்தியாவில் வெளியாகும் நிலையில் அதிகாலை முதலாக அதை வாங்க கூடிய கூட்டத்தில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 17 மாடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் விலை லட்சங்களில் உள்ள நிலையிலும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று iPhone 17 மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது.

 

இந்த ஐஃபோனை வாங்க மும்பையில் பிகேசி ஜியோ செண்டரில் காலை முதலே ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்த நிலையில் அங்கு தள்ளு முள்ளும் கைக்கலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஒரு ஃபோனுக்காக இளைஞர்கள் காட்டும் ஆர்வமும், வன்முறையும் கவலையளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.k