வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2016 (15:59 IST)

சொகுசு நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது இந்தியப் போர்க்கப்பல்

இந்தியக் கப்பல் படையில் புராதனமான இடத்தைக் கொண்ட ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பல் அண்மையில் தனது இராணுவப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளது.
 

 
இராணுவத்திற்காக 60 ஆண்டுகள் பயண்படுத்தப்பட்ட இக்கப்பலானது 30 ஆண்டுகாலம் இங்கிலாந்து கடற்படைக்கு பணிபுரிந்தது. பின்னர் 1987 ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையுடன் இணைந்த ஐ.என்.எஸ். விராட் கப்பலானது பல சாதனை மிகு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயண்பட்டு வந்தது.
 
இருப்பினும் அன்மைய தொழிற்நுட்ப வளர்ச்சியை கருத்திற் கொண்டு கப்பலின் சேவையானது கடற்படையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சமீபத்தில் விசாகப்பட்டணத்தில் நடந்த சர்வதேச கப்பல் படை அணிவகுப்பு விழாவில் பங்கேற்ற இக்கப்பலானது விழாவைத் தொடர்ந்து அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கப்பலை அருங்காட்சியத்துடன் கூடிய சொகுசு நட்சத்திர ஓட்டலாக மாற்றுவதற்கு ஆந்திர அரசு பணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் கப்பலை மாற்றி அமைப்பதற்காக இந்திய கடற்படையின் உதவியை நாடியுள்ள ஆந்திர மாநில அரசானது, இத்திட்டத்தின் மூலம் பெருவாரியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் எனக் கூறுகிறது.
 
சுமார் 1500 அறைகளை கொண்ட இக்கப்பலை கரைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு சுமார் 400 கோடி ரூபா வரை செலவாகும் எனவும், கப்பலின் அமைப்பு ரீயான மாற்றம் மற்றும் அருங்காட்சியக அமைப்பை உருவாக்கல் என்பவற்றிற்கு 300 கோடி ரூபா வரை செலவாகும் என திட்ட அமைப்பாளர்களைக் கொண்டு கணக்குப் போட்டுள்ளது ஆந்திர மாநில அரசு.
 
மொத்தச் செலவு 700 கோடி என்றாலும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசு தீவிரமாக செயல்படுகி;றது. ஏற்கனவே இராணுவ பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பல் மகராஷ்டிரா மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு சொகுசு நட்சத்திர ஓட்டலாக மாற்ற பணிக்கப்பட்டது.