பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை


Abimukatheesh| Last Modified வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (17:09 IST)
ஆக்கிரமிப்பு காஷ்மீரை வீட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென்று இந்தியா எச்சரித்துள்ளது.

 

 
காஷ்மீரை கைப்பற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல் இந்தியா-பாகிஸ்தான் இடையே வார்த்தை பனிபோர் தொடங்கியுள்ளது.
 
இரு நாடுகள் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை பேசிய போது மரியாதை கொடுக்காத பாகிஸ்தான் நாடு, இந்திய ஊடகங்களையும் மாநாட்டு நிகழ்வை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை.
 
இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தினத்தில் பேசியதை பாகிஸ்தான், மோடி எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி பேசி அபாய ரேகையை தாண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டியது.
 
அதைதொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஐஸாஸ் அஷ்மத் சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முன்னேற்றம் பெற வேண்டுமானால் இஸ்லாமாபாத், காஷ்மீரை நோக்கியும் மும்பையைக் குறிவைத்தும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும்.
 
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், என்று எழுதியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :