கன்ஃபர்ம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தால் இனிமேல் பணம் கிடையாதா? இந்தியன் ரயில்வே புதிய அறிவிப்பு..!
இந்திய ரயில்வேயின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயணச்சீட்டு முன்பதிவில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஐந்து முக்கிய சீர்திருத்தங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்துள்ளார்.
இதில் மிக முக்கியமான மாற்றமாக, ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்தால் எவ்வித கட்டணமும் திரும்ப பெறப்படமாட்டாது . கடைசி நேர ரத்துகளை தவிர்த்து, மற்ற பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பயணிகளுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை பயணிகள் தங்கள் பயண வகுப்பை உயர்த்திக் கொள்ளவும், ஏறும் இடத்தை மாற்றிக் கொள்ளவும் இனி அனுமதி உண்டு.
முன்னதாக இது சார்ட் தயாரிப்பதற்கு முன்பாக மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்த மாற்றங்கள் இரயில்வே சேவையை மிகவும் நவீனமாகவும், பயணிகளுக்கு எளிமையாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva