வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (11:32 IST)

திருமணத்திற்கு இன்சூரன்ஸ் இந்தியாவில் புதிய திட்டம்!!

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலும் திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்தத் திருமண இன்சூரன்ஸ் திட்டம் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கிறது.

 
திருமண இன்சூரன்ஸ் என்றால் என்ன? 
 
திருமணம் என்றால் பெரும் அளவில் பணம் விளையாடும், சில நேரத்தில் பணத்தை இழக்க கூடிய நிலைமைக்கும் தள்ளப்படுவார்கள். எனவே திருமணம் நடக்கும் போது ஏற்படும் பெறும் இழப்பை தவிர்ப்பதற்காகவே திருமண இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த திருமண இன்சூரனஸ் திட்டம் ஒரு நிகழ்வு சார்ந்த திட்டம் ஆகும். அதாவது இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம், திருமணத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தொடங்கி அந்த திருமணம் முழுமையாக முடிந்தவுடன் முடிந்துவிடுகிறது.
 
ஒருவேளை மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் இடையில் நின்று போனால் அந்த திருமண நிகழ்வுக்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்ப்படாது.
 
இயற்கை இடர்பாடுகள், விபத்துகள், நகைத் திருடு போதல், பணம் திருடு போதல் போன்ற காரணங்களால் திருமணம் தடைப்படும் போது அந்த இழப்பிற்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்குகின்றன. மேலும் திருமணம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளிப் போனாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ அதற்கான இழைப்பையும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் அளிக்கின்றன.
 
இன்சூரன்ஸ் நிறவனங்கள்:
 
இந்தியாவில் திருமண இன்சூரன்ஸ் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகின்றன. 
 
பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சம் முதல் 4 மட்சம் ரூபாய் வரையிலான திருமண இன்சூரன்சுகளை வழங்குகிறது. இந்த இன்சூரன்சுகளுக்கான பிரீமியத் தொகை 3,770 முதல் 14,275 ரூபாய் வரை இருக்கும்.