வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (00:09 IST)

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஆதரவு

புனே, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு, பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

 
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. கடந்தசில நாட்களுக்கு முன்பு, இதன் தலைவராகக் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுதான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாஜக ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த 50 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு, பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தில் நியாயம் உள்ளது. மாணவர்கள் கோரிக்கையை அரசு காது கொடுத்துக் கேட்க வேண்டும். நாட்டில் பல கல்வி நிறுவனங்களின் தலைமை பதவிகளில் தவறான ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் போராட்டம் நியாயமானதே. அவர்கள் போராட்டத்திற்கு நான் மனப்பூர்வமான ஆதரவை தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.