1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian Army Strikes Back: Terror Camps Destroyed in PoK After Jammu Kashmir Attack

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
 
9 முகாம்களில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகள் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
 
இதன் பின்னணியில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.
 
ராகுல் காந்தி மட்டுமின்றி, மற்ற காங்கிரஸ் தலைவர்களான கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டவர்களும் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய ராணுவத்திற்கு துணையாக இருப்பதால், இந்திய ராணுவம் பெருமை கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!