செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 மே 2025 (12:07 IST)

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவத்தினர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து வரும் நிலையில், தீவிரவாத முகாம்களை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.
 
9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
 
இதில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தின் சார்பில் சோபியா குரேஷி விமானப்படையின் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பேசி வருகின்றனர். குறிப்பாக பெண் ராணுவ அதிகாரிகளான சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
 
மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும், அதற்கு தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran