வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (12:31 IST)

இந்தியா அபார வெற்றி! (வீடியோ)

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியாவை எதிர்கொண்டது.


 
 
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது நியூசிலாந்து அணி.
 
14 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி 65 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து மிகவும் பரிதாபமாக இருந்தது. 100 ரன்னை அந்த அணி கடக்குமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் லதம் மட்டுமே பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 106 ரன்னில் 8-வது விக்கெட்டையும் இழந்த அந்த அணிக்கு சௌதி மற்றும் லதமின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தது.
 
இந்த இணை மிகவும் பொறுப்புடனும் அதிரடியுடனும் விளையாடி 177 ரன்னில் பிரிந்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 190 ரன் குவித்தது. சௌதி 55 ரன் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் லதம் 79 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
 
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதை அடுத்து, 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி.
 
 
ரோஹித் சர்மா, ரஹானே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 9.2 ஓவரில் பிரேஸ்வெல் வீசிய பந்தில் வெரும் 14 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அவரை தொடந்து விராட் கோலி களம் இறங்கி பொறுப்புடன் விளையாடினார். ஆனால் அவருடன் எதிரில் விளையாடிய வீரர்கள், ரஹானே 33 ரன்களுக்கும், மனிஷ் பாண்டே 17 ரன்களும், தோனி 21 ரன்களும் எடுத்து அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது இந்தியா 162 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது களம் இறங்கிய கேதர் ஜாதவ், கோலிக்கு உறுதுணையாக நின்றார். இருவரும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச்சென்றார். 33.1 ஓவரில் இஸ்போசேத்தின் சோதி வீசிய பந்தை கோலி சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். ஆட்ட முடிவில் கோலி 81 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து மொத்தம் 85 ரனகள் எடுத்திருந்தார். 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.