1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (19:58 IST)

பாகிஸ்தானுடன் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங்

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர் தக்குதல் சம்பவம் நடந்து வரும் நிலையில் இந்தியா வந்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவிடம் மத்திய உள்துறை அமச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா எப்பொழுதும் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தாது என்றும் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுடன் நட்புடன் இருப்பதையே இந்தியா விரும்புகிறது. இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானை நோக்கி இந்தியா முதல் குண்டை போடாது என இந்தியா வந்த பகிஸ்தான் பிரதிநிதிகள் குழு இயக்குனர் மேஜர் ஜெனரல் உமர் பரூக் புர்கியிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜ் நாத்தின் இந்த கருத்தை கேட்ட பாகிஸ்தான் பிரதிநிதி, தான் இது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது எனவும் உங்களது கருத்தை பகிஸ்தான் தலைவர்களிடம் எடுத்துக் கூறுவதாகவும் உறுதியளித்தார். மேலும், கூறிய உள்துறை அமைச்சர் இந்திய எல்லையில் பகிஸ்தான் ஊடுருவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும், இந்தியாவும் பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என விரும்புவதாகவும் இதை தான் இந்திய பிரதமர் ரஷ்யாவில் நவாஷ் ஷெரிப்பிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

துரதிர்ஷ்டவசமாக NSA பேச்சுவார்த்தை நடக்கவில்லை, ஆனால் நாங்கள் பாக்கிஸ்தானுடன் நல்ல உறவு வேண்டும் எனவே விரும்புகிறோம், இதை நான் சம்பிரதாய நிமித்தமாக சொல்லவில்லை, மனப்பூர்வமாக சொல்கிறேன்.

நம் நண்பர்களை மாற்ற முடியும் ஆனால் அண்டையில் உள்ளவர்களை மற்ற முடியாது என்ற முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கருத்தை மேற்கோள்காட்டி ராஜ்நாத் சிங் அண்டை நாடுகளுடன் சுமுகமன உறவையே விரும்புகிறோம் என தெரிவித்தார்.