வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (13:44 IST)

இனிமே எல்லா அவசர கால அழைப்புகளுக்கும் 112 : மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் செயல்படும் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்னை அமுல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


 

 
இந்தியாவில்  தற்போதுள்ள நடைமுறையில், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அவசர அழைப்பு எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, தீ விபத்துக்கு 101 என வெவ்வெறு அழைப்பு எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
ஆனால் மேலை நாடுகளில் பெரும்பாலும், ஒரே எண்ணை அனைத்து அவரச உதவிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு அமெரிக்காவில், எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் இங்கிலாந்தில் 999 என்ற எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
அதேபோல் இந்தியாவிலும் அனைத்து அவசர கால உதவிகளுக்கும், ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. 
 
எனவே, இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக 112ஐ அமுல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், காவல்துறை, தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர பேரிடர் மேலாண்மை ஆகியவை இந்த 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.