வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2015 (10:59 IST)

ஊழலின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பேன்: சுதந்திர தின விழாவில் மோடி உறுதி

ஊழலின் பிடியில் இருந்து நாட்டை தம்மால் விடுவிக்க முடியும் என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
 

 
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா பற்றி பேசினேன், மேலும் தூய்மை இந்தியா திட்டம் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும் என்று மோடி கூறியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின் மிகப்பெரும் தூதர்களாக குழந்தைகள் திகழ்கின்றனர். தூய்மை இந்தியா திட்டத்துக்கு நாட்டின் குழந்தைகள் வலுச்சேர்த்துள்ளனர். 2 லட்சம் பள்ளிகளில் 4 லட்சத்து 25 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் உரையாற்றினார்.
 
ஜன்தன் திட்டம் மூலம் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 கோடிப் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது எளிதான காரியமல்ல என பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் பேசியுள்ளார். ஜன்தன் திட்டம் மூலம் வங்கிகளில் ஏழைகள் ரூ.20,000 கோடி சேமித்துள்ளனர். மக்களுக்கான தொடர்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்த சூழலிலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க விடமாட்டோம் என மோடி கூறியுள்ளார். சமூகப் பாதுகாப்பு தமது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. கொள்ளைகளை யாரும் வகுக்கலாம். ஆனால் ஒரு சிலரால்தான் செயல்படுத்தமுடியும். மேலும் சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள மக்களை வளப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. ஏழைகள் மேம்பாடு அடைந்தால் நாட்டின் வளாச்சியை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் பேசியுள்ளார்.
 
ஊழலின் பிடியில் இருந்து நாட்டை தம்மால் விடுவிக்க முடியும் என்றும் மோடி பேசியுள்ளார்.
 
உழைப்பை கவுரவிக்க வேண்டியது நாட்டின் கடமை ஆகும் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தொழிலாளர் நலச் சீர்திருத்தங்களை தமது அரசு கொண்டுவந்துள்ளது, மேலும் எளிமையான, சிக்கலற்ற சட்டங்களால் நாடு வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
 
சுதந்திர தின விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.