எனக்கும் மோடிக்கும் தான் போட்டி, காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இல்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

  In Varanasi, Arvind Kejriwal says his fight is with Narendra Modi; Ajai Rai dismisses claims
Geetha Priya| Last Updated: திங்கள், 12 மே 2014 (13:21 IST)
இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் நேருக்கு நேர் மோதும் வாரணாசி தொகுதி உட்பட 3 மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. 
 
இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் , 'இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் போட்டியில் இல்லை. எனக்கும், மோடிக்கும் இடையில் தான் போட்டி என்றார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அஜய் ராய், அத்தொகுதியில் போட்டியிடுபவர்களில் தான் மட்டும் தான் வாரணாசியை சேர்ந்தவர் எனவும், அதனால் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அஜய் ராய் வாக்களிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :