வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 9 ஜூன் 2014 (15:26 IST)

'கண் எதிரில் எங்கள் நண்பர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்' - மாணவர் வருத்தம்

ஐதராபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றபோது 24 மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் 5 பேரின் சடலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய அனைவரும் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
மணாலி - கிராத்புர் நெடுஞ்சாலையில் மண்டியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலொட் என்ற பகுதியில் பியாஸ் ஆற்றின் கரையோரம் நின்றபடி,  சுற்றுலா வந்த ஐதராபாத் வி.என்.ஆர் விக்னன ஜோதி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 2 ஆம் ஆண்டு மாணவர்கள் 24 பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்.
 
அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரிக்கப்பட்டதால், ஆற்றில் நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓட  கரையோரம் இருந்த 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 
 

மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில், இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் மூழ்கிய அனைவரும் இறந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த மாணவர் ரவிகுமார், நானும் எனது நண்பர்கள் சிலரும் ஆற்றின் நீர்மட்டம் அதிகமானதை கண்டோம். 
 
அதிர்ச்சியடைந்த நாங்கள் எங்கள் நண்பர்களை காப்பாற்ற முயற்சித்தோம் ஆனால், 5-6 வினாடிகளிலேயே அவர்கள் எங்கள் கண் எதிரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் எனத் தெரிவித்தார்.
 
இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்தவரும், கல்லூரி பேராசிரியருமான கிரண் என்பவரையும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது