வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : சனி, 10 மே 2014 (11:08 IST)

பாஜகவை எதிர்த்து செயல்பட காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லை - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் உள்ள பெர்ஹம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பாஜக மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாகவும், தான் மட்டும் டெல்லியில் இருந்திருந்தால் இந்நேரம் மோடி சிறையில் இருந்திருபாரெனவும் பேசியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான  மம்தா பானர்ஜியும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிவருகின்றனர்.
 
இதன் தொடர்ச்சியாக அண்மையில் பெர்ஹம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பாஜக மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாகவும், தான் மட்டும் டெல்லியில் இருந்திருந்தால் இந்நேரம் மோடி சிறையில் இருந்திருபாரெனவும் பேசியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் பேசியதாவது, 'காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லை. நரேந்திர மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச அஞ்சுகிறது. ஆரம்பத்தில் இருந்தே பாஜகவிற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்திருந்தால் பாஜக விற்கு இவ்வாறு பேச துணிச்சல் வந்திருக்காது. 
 
டெல்லியில் காங்கிரஸ் இருக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் நரேந்திர மோடியை  இடுப்பில் கயிற்றை கட்டி சிறைக்கு அனுப்பியிருப்பேன்.
 
நரேந்திர மோடி பிரதமர் ஆகிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது, ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அந்த குழந்தையின் திருமண தேதி மற்றும் அது யாரை திருமணம் செய்யப் போகிறது என்பதை முடிவு செய்வது போல உள்ளது. 
 
மோடிக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் பைகளை எடுத்துக்கொண்டு தயாராக இருங்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இங்குள்ள மக்கள் உங்களை விரட்டுவார்கள்' எனப் பேசியுள்ளார் 
 
இவ்வாறு அவர் பேசினார்.