சிந்துவை வரவேற்க தயாராகும் ஹைதராபாத் : தாரை தப்பட்டைகள் ரெடி

சிந்துவை வரவேற்க தயாராகும் ஹைதராபாத்


Murugan| Last Modified ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (13:13 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சிந்து மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

 

 
அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 1000 சதுர அடி நிலம், ரூ.3 கோடி பரிசு, அரசாங்க வேலை என ஆந்திர மாநில அரசு அவரை கவுரவித்துள்ளது.
 
பிரேசிலில் இருந்து சிந்து நாளை ஹைதராபாத் திரும்புகிறார். அவரை வரவேற்பதற்காக ஹைதராபாத் மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
விமான நிலையத்தில் அவரை வரவேற்று, அங்கிருந்து கச்சிபோலி விளையாடு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட இருக்கிறார். அந்த வழி முழுவதும் அவரை வரவேற்கும் வகையில் பேணர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதன்பின், அங்குள்ள மைதானத்தில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :