1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2016 (13:50 IST)

காவிரி கலவரம்; ரூ.25 ஆயிரம் கோடி ஸ்வாகா : பெங்களூருக்கு ஆப்படிக்கும் ஐ.டி.நிறுவனங்கள்

காவிரி கலவரம்; ரூ.25 ஆயிரம் கோடி ஸ்வாகா : பெங்களூருக்கு ஆப்படிக்கும் ஐ.டி.நிறுவனங்கள்

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பெங்களூரில் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரம் காரணமாக, அங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என்று கடந்த ஒரு வாரமாக, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். தமிழர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.
 
தமிழகத்திலிருந்து பெங்களூருக்கும், பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கும் போக்குவரத்துகள் தடைபட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். 
 
இதில் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 நாட்கள் ஐ.டி. நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி மூடப்பட்டன.  கலவரங்களுக்கு பயந்து, அங்கு பணிபுரிந்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். 
 
இதனால் ஐ.டி. நிறுவனங்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கிட்டத்தட்ட ரூ.22 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி முதல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. 
 
தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்குள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் இருந்த சில நிறுவனங்கள் கூட, கடந்த நவம்பரில் மழை பெய்து வெள்ளம் வந்த போது, மழைக்கு பயந்து பெங்களூருக்கு சென்று விட்டன. 
 
தற்போது அந்த நிறுவனங்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்ப முடிவெடுத்துளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் மட்டுமில்லாமல், சிறிய பெரிய தொழில் நிறுவனங்களும் தங்கள் இருப்பிடத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
பெங்களூர் பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருவதாக கருத்து நிலவி வருகிறது.