வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (22:33 IST)

குழந்தைகள் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லுகையில் 'தூய்மை இந்தியா' எப்படி நிறைவேறும்? - அமர்த்தியா சென் கேள்வி

இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லுகையில் 'தூய்மை இந்தியா' என்பது எப்படி நிறைவேறும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கேள்வியெழுப்பி உள்ளார்.
 
சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் உலகளவில் பசிக்கான அளவீடுகள் குறித்த ஆய்வினை ஆண்டு தோறும் வெளியிடுகிறது. டில்லியில் கடந்த ஞாயிற் அன்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், '76 நாடுகளைக் கொண்ட பசியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 55 ஆவது இடத்தில் இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது.
 

 
இதற்கிடையில் பாஜக அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைப் படிப்படியாக குறைத்து, அதை ஒழித்துக் கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரெஸ் ஆகியோரும் உணவு உரிமைக்கான கூட்டமைப்பினரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 
அந்த அறிக்கையில் அவர்கள், "இதுபோன்ற வேலை வாய்ப்பு, உணவு மானியத் திட்டங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டங்களை குறைப்பதும் ரத்து செய்வதும் ஒரு நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
 

 
'தூய்மை இந்தியா' என்ற பிரச்சாரத்தில் இது போன்ற மிக முக்கியமான விசயங்கள் குறித்த விவாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. மேலும் இதுபோன்ற அடிப்படையான விசயங்களை எல்லாம் விவாதிப்பது கிட்டத்தட்ட காலப்போக்கில் மறைந்துபோன வழக்கமாகி வருகிறது.
 
'தூய்மை இந்தியா' என்பது பசித்த வயிறுகளுடன் எப்படி நிறைவேறும்" என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.