பிரபல ஓட்டல் நடன கலைஞரை பாலியல் பலாத்காரம் செய்த 4 அதிகாரிகள்

பிரபல ஓட்டல் நடன கலைஞரை பாலியல் பலாத்காரம் செய்த 4 அதிகாரிகள்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (15:38 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் ஓட்டல் நடன கலைஞர் ஒருவரை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
 
 

 
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரபல பேரடைஸ் ஓட்டலில் நடன கலைஞராக பணிபுரியும் பெண் ஒருவர் பாந்தரா காவல் நிலையத்தில் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
 
 
அதன் பேரில் காவல் துறையினர் அந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாக வீடியோ காட்சியை சோதனை செய்தனர். அதில் அந்த பெண் பலாத்காரம் செய்த 4 பேரை அடையாளம் காட்டினார்.
 
அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் பிரபல நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் வேலை செய்பவர்கள் என்றும், ஓட்டலில் குடித்துவிட்டு அங்கு நடனமாடும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 
 
இதையடுத்து காவல் துறையினர், அந்த நான்கு பேர் மற்றும் ஒட்டல் மேலாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :