வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2015 (17:38 IST)

ஓட்டலில் பெண்ணுடன் தங்கி, மது அருந்தி, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சாமியார்: மக்கள் போராட்டம்

ஒடிசா மாநிலம் கெண்டரபாராவை சேர்ந்த சாமியார் சாரதி பாபா ஓட்டலில் ஒரு பெண்ணுடன் தங்கி, மது அருந்தி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டது தொடர்பாக கடந்த 3 நாட்களாக அவருக்கு எதிராக அந்த பகுதியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
உள்ளூரை சேர்ந்த செய்தி சேனல் ஒன்று சாமியார் சாரதி பாபா மருத்துவம் படிக்கும் ஒரு பெண்ணுடன் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த மாதம் தங்கி இருந்ததாகவும். அப்போது சாமியார் விஸ்கி மது அருந்தி தந்துரி சிக்கன் சாப்பிட்டதாகவும் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து சாமியாருக்கு எதிராக போராட்டம் வெடித்து உள்ளது.
 
மேலும் அந்த சேனல் சாமியார் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டி சர்ட்டுடன் கூலிங் கிளாஸ் அணிந்து  ஐதராபாத் ஓட்டலில் எடுத்து கொண்ட  புகைப்படத்தையும் காட்டியது.
 
உள்ளூரை சேர்ந்த சில அமைப்பினர் சாமியாருக்கு எதிராக அவரது வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர். போராட்டம் பரவுவதை தொடர்ந்து மாநில அரசு சாமியார் மீது குற்றவியல் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
குற்றபிரிவு காவல்துறையினர் சாமியாரின் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்தும் விசாரணை நடத்துகிறது என குற்றவியல் பிரிவு ஏடிஜி சர்மா தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது என அவர் கூறினார்.
 
சாமியார் தனக்கு எதிரான குற்றசாட்டுகளை மறுத்துள்ளார். தன்னை அவமானபடுத்த சதி நடப்பதாக கூறியுள்ளார்.
 
சாரதி பாபா, சாராதி ஆசிரமத்தை கெண்டரபாரா நகரில் பாரிமுலா பகுதியில் 1992-93 இல் அமைத்தார். கடந்த வருடம் கெண்டரபாராவில் சாமியார் மிகப்பெரிய கோவில் ஒன்றை கட்டினார். கோவிலின் உள்ளே அவர் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.