1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. HDFC Bank Hikes MCLR Rates; Home, Car, and Personal Loan EMIs Likely to Rise

ரெப்போ உயராவிட்டாலும் வட்டியை உயர்த்திய எச்டிஎஃப்சி.. கடன் வாங்கியவர்கள் அதிருப்தி..

எச்டிஎஃப்சி வங்கி வட்டி உயர்வு
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி , தனது நிதி சார்ந்த கடன் வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றமில்லாமல் வைத்திருந்த போதிலும், எச்டிஎஃப்சி வங்கியின் இந்த அதிரடி உயர்வு ஜூன் 8 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர இஎம்ஐ  சுமை அதிகரிக்கப் போகிறது.
 
வங்கியின் நிதி ஆதார செலவுகள் மற்றும் சந்தை பணப்புழக்கத்தை கருத்தில் கொண்டு இந்த வட்டி உயர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்களின்படி, பெரும்பாலான பழைய வீட்டு கடன்களுடன் தொடர்புடைய 1 ஆண்டுக்கான MCLR வட்டி 8.35%-லிருந்து 8.40% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பெருநிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான 2 ஆண்டுகால வணிக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக 0.10% உயர்ந்து 8.55% ஆக அதிகரித்துள்ளது.
 
இருப்பினும், தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு இந்த இஎம்ஐ உயர்வு உடனடியாப் பாதிக்காது. ஒவ்வொரு கடனுக்கும் பொதுவாக 6 மாதங்கள் அல்லது 1 ஆண்டு வரையிலான 'ரீசெட் பீரியட்' இருக்கும். உங்கள் கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ரீசெட் தேதி வரும்போது மட்டுமே இந்த புதிய வட்டி விகிதம் உங்களுடைய கடனுக்கு பொருந்தும் என்பதால் தற்போதைக்கு உடனடி பாதிப்பு இல்லை.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மும்பை - ஹைதராபாத் புல்லட் ரயில்.. பயண நேரம் வெறும் 3 மணி நேரம் தான்.. 300 கிமீ வேகம்..