வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (01:06 IST)

காவல் நிலையத்தில் சரக்கு அடித்து ரகளை செய்த இளம் பெண்

மும்பை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் சரக்கு அடித்து ரகளை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மும்பையில் ஒரு பிரபல ஹோட்டலில் நள்ளிரவில் மதுபோதையில் 25 வயதுள்ள ஹரியானாவைச் சேர்ந்த இளம் பெண் சுனிதா யாதவ் என்பவர், தனது ஆண் நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இந்த தகவல் அறிந்த அந்தேரி காவல்துறையினர்  அந்தப் பெண்ணை, அந்த இடத்தில் இருந்து செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அதை அலட்சியம் செய்த அப் பெண், மீண்டும் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனையடுத்து,  அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர்,  மீண்டும் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அதை கேட்காமல், தான் கொண்டு வந்த பீர் பாட்டிலில் மீதம் உள்ள கூலிங் பீர் குடித்துக் கொண்டே உளறலில் ஈடுபட்டார்.
 
இதனால், அவரது அட்டகாசங்களை வீடியோ பதிவு செய்த காவல்துறையினர், காலை வரை அமைதி காத்தனர். பின்பு, காலையில் அந்த பெண் அட்டகாசங்கள அப்பெண்ணு போட்டி காட்டினர். மேலும், அவரது சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ரூ 1,200 மட்டும் அபராதம் விதித்து அனுப்பிவைத்தனர்.
 
மது அருந்தவதே உடலுக்கும், நாட்டிற்கும் கேடு என்று அரசே சொல்லும் நிலையில், அதுவும் காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவர் மது அருந்தி போதையில் அட்டகாசம் செய்த சம்பவம் மும்பையில் பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளது. இந்த சம்பவம் மும்பையில் மட்டும் அன்றி, இந்தியா முழுமைக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.