வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:58 IST)

மெக்கா விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்வு - சுஷ்மா ஸ்வராஜ்

சவுதி அரேபியாவில் கடந்த மாதம் மெக்காவுக்கு அருகில் ஹஜ் புனித வழிபாட்டின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.


 

 
மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளதாகவும், விபத்தில் சிக்கி இதுவரை 101 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேரை காணவில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
 சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், ஹஜ் புனித பயணத்திற்கு வந்தபோது கூட்ட நெரிசலில் உயிரிழந்த இந்தியர்களை அடையாளம் காண உதவ வேண்டும் என அந்நாட்டு அரசிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக 769 பேர் இறந்ததாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெளிநாட்டு ஊடகங்களும் பிற வெளிநாட்டு அதிகாரிகளும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகக் கூறிவருகின்றனர்.
 
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஹஜ் யாத்திரையின் போது நடந்த மிக மோசமான விபத்து இந்த விபத்து தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 76 பாகிஸ்தான் நாட்டைசேர்ந்த இஸ்லாமியர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.செய்திகள் தெரிவிக்கின்றன.
 
செப்டம்பர் 24ஆம் தேதி மெக்காவை அடுத்த மினாவில் ஏற்பட்ட விபத்தில் 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.