ஹஜ் பயணிகளிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த நடிகை


Suresh| Last Updated: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (07:53 IST)
ஹஜ் பயணிகளிடம்  ரூ.2½ கோடி மோசடி செய்த கன்னட நடிகை மரியா சூசைராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 
கன்னட பட நடிகை மரியா சூசைராஜ். இவர் மாடல் அழகியாக இருந்த பின்னர் திரைப்பட நடிகையாக ஆனவர்.
 
இவர் குஜராத் மாநிலம், வதோதராவில் விமான பயணச் சீட்டை பதிவு செய்து தரும் நிறுவனம் ஒன்றை நடத்தினார்.
 
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் 1,000 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் விமான பயணத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
 
விமான பயணத்திற்காக, முதலில் பதிவு செய்து விட்டு, பின்னர் அந்த பயணிகளுக்குத் தெரியாமல் அதை ரத்து செய்து சுமார் ரூ.2½ கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து, ஆமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம், புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட நடிகை மரியா சூசைராஜை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும்,  அவருக்கு உடந்தையாக இருந்து, தற்போது  தலைமறைவாக உள்ள பரோமிதா சக்கரவர்த்தி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :