செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

கள்ளக்காதலை பார்த்துவிட்ட 5 வயது மகனை கொலை செய்த தாய்.. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!

கள்ளக்காதலை பார்த்துவிட்ட 5 வயது மகனை கொலை செய்த தாய்.. நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு..!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கள்ளக்காதலை மறைப்பதற்காக தனது ஐந்து வயது மகனையே கொலை செய்த தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 
 
2023, ஏப்ரல் 28 அன்று காவல்துறை காவலரான தியான் சிங் ரத்தோரின் மனைவி ஜோதி ரத்தோர், தனது பக்கத்து வீட்டு இளைஞருடன் நெருக்கமாக இருப்பதை அவரது 5 வயது மகன் ஜதின் நேரில் பார்த்துள்ளார்.
 
தவறான உறவு தந்தைக்கும் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், ஜோதி தனது மகனை கட்டிடத்தின் இரண்டாவது மாடி மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தான். 
 
ஆரம்பத்தில் இது தவறி விழுந்து நடந்த விபத்தாக கருதப்பட்டது. ஆனால், குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த தியான் சிங், ரகசியமாக தனது வீட்டில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, தனது மனைவியின் வாக்குமூலங்களையும் வீடியோவாக பதிவு செய்தார்.
 
குற்றம் நடந்த 15 நாட்களுக்கு பிறகு ஜோதி தனது கணவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆதாரங்களுடன் தியான் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜோதி ரத்தோரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 
 
Edited by Siva