1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 9 ஆகஸ்ட் 2014 (13:38 IST)

பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் உபயோகிக்கத் தடை: உ.பி. கிராமக் கட்டப்பஞ்சாயத்து முடிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்தவர்களின் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கிராமத்தில் உள்ள தங்கள் சமூக பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பேசவும் தடை விதிக்கப்பட்டது.
பெருகி வரும் ஈவ் டீசிங் சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆட்சேபனைக்குரிய ஆடைகளும், செல்போன் பயன்படுத்துவதும் தான் முக்கிய காரணம் என்று அக்கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
 
திருமண விழாக்களின் போது நாகரீகமாக உடையணிந்து செல்ல வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் என்பவரும் கலந்து கொண்டு சமூக பஞ்சாயத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
 
உ.பி. மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் ஈவ் டீசிங் சம்பவங்கள் நடைபேற்றபோது, கட்ட பஞ்சாயத்துகளிலும், ஜாதிக் கூட்டங்களிலும் இது போன்ற தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.