1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (20:31 IST)

குஜராத் மாடல் என்ற பலூன் தற்போது வெடித்து சிதறிவிட்டது - ராகுல் காந்தி தாக்கு

குஜராத் மாடல் நிர்வாகம் என்ற பலூன் தற்போது வெடித்து சிதறிவிட்டது என்று காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

 
சகிப்புத்தன்மையற்ற வகையில் பேசும் மத்திய அமைச்சர்களை இன்னும் பதவியில் வைத்திருப்பது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மக்களவையில் நடந்த சகிப்புத்தன்மை குறித்த விவாதத்தின்போது பேசிய ராகுல் காந்தி, ”தலித்துக்களை நாய்களோடு ஒப்பிட்ட அமைச்சர் வி.கே.சிங் போன்றோர் பதவியில் தொடர்வதற்கு மோடி அனுமதித்துள்ளார்.
 
ஒரு முஸ்லிம் பெரியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை காப்பாற்றும் உச்சப் பொறுப்பில் இருக்கும் பிரதமரோ அதுபற்றி வாய் திறக்கவில்லை. கலவரங்கள் திட்டமிட்டு, உருவாக்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
 
இது ஒன்றும் மேக் இன் இந்தியா போல கனவு கிடையாது. நிஜத்தில் நடப்பதைதான் சொல்கிறோம். யாராவது போராடினாலே உடனே அவர்கள் மீது தேச துரோகவழக்கு பாய்கிறது.
 
குஜராத் மாடல் நிர்வாகம் என்ற பலூன் தற்போது வெடித்து சிதறிவிட்டது. படேல்கள் போராட்டம் அதை அம்பலப்படுத்திவிட்டது கூறியுள்ளார்.