1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Government to Examine WhatsApp’s New Username Feature Amid Rising Concerns Over Online Fraud

வாட்ஸ் அப் வழங்கிய புதிய வசதி.. இது ஆபத்தானது.. எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய அரசு...

வாட்ஸ்அப் பயனர் ஐடி
வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'பயனர் ஐடி' அம்சம், ஆன்லைன் மோசடிகளை அதிகரிக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், இது குறித்து அரசு ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
 
போன் நம்பரை பகிராமல், மூன்று முதல் 35 எழுத்துகள் கொண்ட தனித்துவமான பயனர் பெயரை வைத்து மற்றவர்களுடன் தொடர்புகொள்ள இந்த வசதி வழிவகுக்கிறது. இது தனியுரிமையை பாதுகாக்கும் என்று வாட்ஸ்அப் கூறினாலும், இதனால் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்கள் அதிகரிக்கும் என பல வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
டெலிகிராம் செயலியை போல, இதில் குற்றவாளிகளின் அடையாளம் மறைக்கப்பட்டு, சைபர் குற்றங்களை விசாரிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் எழும் என்று கூறப்ப்படுகிறது. பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா போன்றோர், பொதுமக்களின் பெயர்களில் போலி ஐடிக்களை உருவாக்கி பண மோசடி செய்ய இது வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர். 
 
இந்தியாவில் முறையான பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்றால் இது பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாமக உள்ள வரக்கூடாது!. ராகுல் வைத்த செக்!.. கடுப்பில் அன்புமணி ராமதாஸ்...