வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (10:29 IST)

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் 95 வது நாளை எட்டியது

புனே திரைப்படக்கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 95 வது நாளை எட்டியுள்ளது.
 
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படக் கல்லூரிகளில் புனே திரைப்படக் கல்லூரியும் ஒன்று. இக்கல்லூரியின் புதிய முதல்வராக கஜேந்திர சவுகான் என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
 
பிரபல டிவி நடிகரும், பா.ஜ.க. உறுப்பினருமான சவுகான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று கூறி புனே திரைப்படக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 
 
மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் தற்போது 95 வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தீர்வு காண அரசு முயற்சிக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


 
 
இது குறித்து மாணவர் பிரதிநிதி விகாஷ் கூறுகையில், "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு 100 மணி நேரம் ஆன பின்பும், அரசிடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு வரவில்லை. ஊடகங்களின்  வழியாக  எங்களது போராட்டம்  அரசின் கவனதித்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்ற ஒரு நம்பிக்கை  உள்ளது" என்று தெரிவித்தார்.