1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 5 மார்ச் 2016 (16:41 IST)

16 வயது சிறுமி வளர்ப்பு தந்தையால் பலாத்காரம்: பெயர் சொல்ல கூடாது என தாய் வற்புறுத்தல்

16 வயது சிறுமி வளர்ப்பு தந்தையால் பலாத்காரம்: பெயர் சொல்ல கூடாது என தாய் வற்புறுத்தல்

மூன்று மாதத்திற்கும் மேலாக ஒரு 16 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை கோர்ட்டில் நேருக்கு நேராக பார்த்த அந்த சிறுமி மயங்கி விழுந்தார்.


 
 
மருத்துவப் பரிசோதனையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து, சிறுமியிடம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றவாளியை அடையாளம் காண, உறுதிபடுத்த சில கேள்விகள் கேட்க்கப்பட்டது.
 
ஆனால், சிறுமிக்கு மன அழுத்தம் அதிகமாக மயங்கி விழுந்தார். சிறுமி கோர்ட்டுக்கு செல்லும் சில நிமிடங்களுக்கு முன் அவளது தாய் மற்றும் பாட்டி அந்த சிறுமியிடம் வளர்ப்பு தந்தையை காட்டிக்கொடுக்க வேண்டாம், வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் என வற்புறுத்தியதை நீதிமன்ற ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
 
நீதிமன்ற ஊழியர்கள் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வினோத் யாதவிடம், இரண்டு பெண்கள் சிறுமியை வற்புறுத்தியதை எடுத்துக்கூறினர்.
 
இதனை கேட்ட ரோகிணி மாவட்ட நீதிபதி யாதவ், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் சிகிச்சை அளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டார்.
 
சிறுமி எந்த அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என மதிப்பிடவும், இந்த குழப்பமான சூழ்நிலையில் இருந்து சிறுமி வெளியே வர சிறப்பு ஆலோசனைகள் வழங்கவும் நீதிபதி உத்தர்விட்டுள்ளார். பின்னர் சிறுமியின் வாக்குமூலம் பெறப்படும் என நீதிபதி யாதவ் கூறினார்.