1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

மூன்று சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. தந்தையே மறைமுக காரணமா?

மூன்று சிறுமிகள் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. தந்தையே மறைமுக காரணமா?
காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
12, 14 மற்றும் 16 வயதுடைய அந்த சகோதரிகள் கடந்த புதன்கிழமை 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தந்தை சேத்தன் குமாருக்கு சொந்த சகோதரிகளான சுஜாதா, ஹீனா மற்றும் டினா ஆகிய மூன்று மனைவிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 2015-ல் இவருடன் வசித்த மற்றொரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கும் இப்போது மீண்டும் தூசு தட்டப்படுகிறது.
 
பங்குச்சந்தை தரகரான சேத்தன் குமார், ரூ.2 கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளார். மின்சார கட்டணம் செலுத்த மகள்களின் செல்போன்களை அவர் விற்றதாகவும், நிதி நெருக்கடியால் சிறுமிகள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 
 
அந்த சிறுமிகள் கொரிய கலாச்சாரம் மற்றும் கொரிய விளையாட்டுகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது அவர்களின் டைரி குறிப்புகள் மூலம் அம்பலமாகியுள்ளது. "நாங்கள் கொரியாவை நேசிக்கிறோம்" என எழுதியுள்ள அவர்கள், தற்கொலையைத்தூண்டும் ஒரு கொரிய விளையாட்டில் ஈடுபட்டு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 
 
கடன் சுமை, குடும்பச் சிக்கல் மற்றும் கேமிங் அடிக்‌ஷன் ஆகிய கோணங்களில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
 
Edited by Siva