தொடர்புடைய செய்திகள்
- கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?
- ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...
- அம்பானி மாசம் எவ்ளோ கரண்ட் பில் கட்றாரு தெரியுமா?!.. ஷாக் ஆயிடுவீங்க!...
- ஹிண்டென்பெர்க் அறிக்கையால் ரூ.8.8 லட்சம் கோடி இழப்பு! - அதானி வேதனை!
- அம்பானி குடும்பத்தின் நவராத்திரி கொண்டாட்டம்: பாரம்பரிய உடை, கலைநயம் மிக்க அலங்காரம்
முகேஷ் அம்பானியை முந்தினார் கௌதம் அதானி: ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தராக புதிய சாதனை!
ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் மிகச்சிறந்த செல்வந்தராக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு 3.56 பில்லியன் டாலர் அதிகரித்தது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே சமயம், 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு சரிந்து, உலகப் பட்டியலில் 20-வது இடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 8.10 பில்லியன் டாலர் அதிகரித்துள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் எலான் மஸ்க் 656 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் தொடர்கிறார். வாரன் பெபெட், பில் கேட்ஸ் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இந்த 2026-ம் ஆண்டில் சரிவை கண்டுள்ள நிலையில், அதானியின் இந்த வளர்ச்சி கவனத்தை பெற்றுள்ளது.
Edited by Siva
