1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Ganga Water Level Crosses Warning Mark, Boat Operations Suspended Amid Flood Alert

கங்கையில் வெள்ள அபாயம்... பக்தர்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

Ganga River
கங்கை ஆற்றில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து கங்கை ஆற்றில் படகு இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆற்றங்கரைகள், படித்துறைகள் மற்றும் அதிக நீரோட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
கங்கை மட்டுமின்றி வருணா ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 11 பகுதிகள் மற்றும் வார்டுகள் வெள்ளத்தால் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன. வருணா ஆற்றின் வெள்ளப்பெருக்கால் 328 குடும்பங்களைச் சேர்ந்த 1,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அவசர நிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டத்தில் 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 219 குடும்பங்களைச் சேர்ந்த 935 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமார், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உடனடியாக மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
 
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பவன் கல்யாணுக்கு பிளெக்ஸ் போர்டு!. மின்சாரம் தாக்கி ரசிகர் அதிர்ச்சி மரணம்..