வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (09:50 IST)

திருப்பதி தரிசனத்திற்கு இலவச டிக்கெட் எப்போது வழங்கப்படும்??

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க இலவச டிக்கெட் எப்போது வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலரால் ஆன்லைன் புக்கிங் மேற்கொள்ளப்பட முடியவில்லை. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர பேருந்துகளிலேயே பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான துணை கோவில்களில் பக்தர்களின் வருகையை அதிகரிக்க ஆந்திர சுற்றுலா கழகம் மற்றும் பஸ் போக்குவரத்து கழகங்கள் மூலம் சுற்றுலா பேக்கேஜ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இலவச டிக்கெட் எப்போது வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 3வது அலை எச்சரிக்கை இருப்பதால் தற்போதைக்கு இலவச தரிசனம் தொடங்குவது குறித்து திட்டம் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.