முன்னாள் அசாம் முதல்வர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

முன்னாள் அசாம் முதல்வர் காலமானார்
siva| Last Updated: திங்கள், 23 நவம்பர் 2020 (18:40 IST)
முன்னாள் அசாம் முதல்வர் காலமானார்
அசாம் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த தருண் கோகாய் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சற்றுமுன் காலமானதாக வெளியாகியுள்ள தகவல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அசாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சையின் பலன் இன்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 86. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால் சிகிச்சையின் பலனின்றி கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் தருண் கோகாயின் உயிர் பிரிந்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
மூன்று முறை அசாம் மாநிலத்தில் முதல்வராக இருந்து மக்களின் மனதில் இடம் பெற்றவர் தருண் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவு காரணமாக காலமான தருண் கோகாய் அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :