போதை ஊசி, தினம் தினம் சித்ரவதை: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மகள் புகார்!

Last Modified ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (17:32 IST)
தனது தந்தையே தனக்கு போதை ஊசி ஏற்றி சித்திரவதை செய்வதாக முன்னாள் பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகள் போலீஸ் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ ஆக இருந்தவர் சுரேந்திரநாத்சிங். இவருடைய 28 வயது மகள் திடீரென காணாமல் போனதால் அவரை கண்டுபிடித்து தர வேண்டி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றில் பேசிய அவரது மகள் தனது தந்தை எம்எல்ஏ ஒருவரின் மகனை திருமணம் செய்ய தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் தான் காதலித்த ஒருவருடன் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

மேலும் தனது தந்தை அவர் கூறிய நபரை நான் திருமணம் செய்யாததால் தன்னை தந்தையும் மற்றவர்களும் போதை ஊசி போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்து தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடி கொண்டதாகவும் கூறியுள்ளார்

இது குறித்து கருத்து கூறிய முன்னாள் எம்எல்ஏ சுரேந்திரநாத்சிங் தனது மகன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :