கேரளாவில் நடந்த விபத்தில் இரண்டு துண்டுகளான விமானம் – மீட்புக்குழுவினர் விரைவு!

Last Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (21:20 IST)

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.

இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்புக் குழுவினர் இப்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :