ஆந்திராவில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி


Bala| Last Updated: புதன், 18 நவம்பர் 2015 (11:26 IST)
ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
 
 

வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் கடப்பாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சிறுவர்கள் பாலடைந்த கட்டடம் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தீடீர் என அந்த கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :