வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2016 (05:12 IST)

பெண் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவார்கள்: அருண் ஜெட்லி

பெண் தொழில் முனைவோர் ஊக்குவிக்க, எழுந்திடு இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
 

 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சி.ஐ.ஐ. சார்பில், மூன்று நாள் வர்த்தக மாநாடு நடைபெறுகிறது. இதில், உள்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்து பேசியதாவது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், ஒரு பெண் தொழில் முனைவோருக்கும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்ந்த இரண்டு பேருக்கும் கடனுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் எழுந்திடு இந்தியா திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.