பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தந்தை

பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தந்தை


Abimukatheesh| Last Modified வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (16:42 IST)
மகனின் தொல்லை தாங்காமல் கூலிப்படையை வைத்து தந்தை பெற்ற மகனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் ஜுன்புத் என்ற இடத்தை சேர்ந்த அசோக் திரி வேதி என்பவர் மரம் செய்து வருகிறார். இவரது மகன் மார்ச் மாதம் 6ஆம் தேதி அசோக் என்பவரின் மகன் கொலை செய்யப்பட்டார்.
 
கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியும், குற்றவாளியை கண்டுப்பிடிக்க முடியாமல் இருந்தது. காவல் துறையினர் விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் மகன் கொலை குறித்து அசோக் காவல் துறையினரிடம் எந்த புகாரும் செய்யாமல், அதில் எந்த அக்கறையும் காட்டாமல் இருந்துள்ளார்.
 
அசோக்கின் செயல்கள் குறித்து காவல் துறையினர் சந்தேகம் அடைந்து ரகசியமாக அவரை கண்காணித்து வந்துள்ளனர். அதில் அசோக் கூலிப்படையை வைத்து மகனை கொலை செய்தது தெரிவந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் அசோக் மற்றும் கொலை செய்தவர்களையும் கைது செய்தனர். காவல் துறையினரிடம் கொலை குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதில் அசோக் கூறியதாவது:-
 
குடிப்பழக்கம் உடைய தனது மகன் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, சூதாட்டத்தில் ஈடுபடுவது, போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதில் அவருடைய தொல்லை தாங்காமல், மகனை தந்தையே கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
 
அசோக் ரூ.1 லட்சத்துக்கு 30 ஆயிரம் பணம் கொடுத்து கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி கூலிப்படையினர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 


இதில் மேலும் படிக்கவும் :