கழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..

Arun Prasath| Last Modified சனி, 18 ஜனவரி 2020 (18:17 IST)
உத்தர பிரதேசத்தில் பொதுக் கழிவறையை ஒரு குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள அகன்பூர் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக கட்டப்பட்ட்ட பொதுக் கழிவறையை ராம் பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து ராம் பிரகாஷ், ”எங்களுக்கு முறையான வீடு ஒதுக்கப்படவில்லை. ஆதலால் ஒரு வருடமாக பொதுக் கழிப்பறையை சமயலறையாக பயன்படுத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பாரபங்கி மாவட்ட நீதிபதி டாக்டர் ஆதர்ஷ் சிங், “வீட்டு வசதி வேண்டி எந்த தகவலும் வரவில்லை, பிரகாஷ் விண்ணப்பித்தால் அவருக்கு தங்கும் இடவசதி வழங்கப்படும். ஆனால் அவருக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :